Aadi Dangum Valkaiyada Song Lyrics in Tamil
ஆடி அடங்கும் வாழ்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்கையடா
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலட
கண் மூடினால் கால் இல்லா கட்டிலடா
ஆடி அடங்கும் வாழ்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்கையடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்
ஆடி அடங்கும் வாழ்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்கையடா
சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
Read also Shiva Tandava Stotram Lyrics in Telugu
ஆடி அடங்கும் வாழ்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்கையடா
வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைபதில்லை
தொகுப்பார் சிலரதை சுவைபதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை
ஆடி அடங்கும் வாழ்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்கையடா