Aariro Aarariro Song Lyrics in Tamil
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
ஓ… தாயாக தந்தை மாறும் புதுக் காவியம்
ஓ…….இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம்
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்ற போதும் சுமந்திடத் தோணுதே ………
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
Know more about Aadi Dangum Valkaiyada Song Lyrics in Tamil
முன்னம் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே
மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே
பிள்ளைப் போல் இருந்தும் இவள் அன்னையே
இது போல் ஆனந்தம் வேறில்லையே …………
இரு மனம் ஒன்று சேர்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே
ஒரு நொடி போதும் போதும் என்று ஓர் குரல் கேக்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்
கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்
அடடா தெய்வம் இங்கு வரம் ஆனதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரம் ஆனதே ……………
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே……
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே…….
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு